அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து அலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகளை கனடா எல்லை சேவைகள் நிறுவனம் விதித்துள்ளது.
கனடா-அமெரிக்க நில எல்லை மார்ச் 21ஆம் திகதி முதல் அத்தியாவசியமற்ற போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கர்கள் கனடா வழியாக வாகனம் ஓட்டினால் அலாஸ்காவுக்கு வேலை அல்லது வீடு திரும்புவது போன்ற ஒரு அத்தியாவசிய நோக்கத்திற்காக இன்னும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், இதனை சில அமெரிக்கர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் எல்லை அதிகாரிகளிடம் அலாஸ்காவுக்கு ஓட்டுவதாக கூறி பின்னர், கனடாவில் விடுமுறையை கழிக்கின்றனர்.
இதனிடையே அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து அலாஸ்காவுக்குச் செல்ல எத்தனிக்கும் எவருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.