தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 5 மணித்தியாலத்தில் 421 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதியிலேயே 421 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதாவது, ‘நிறைவடைந்த பொதுத்தேர்தலில் இதுவரை 8025 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
எனினும் வன்முறை செயற்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் 70% வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது