வல்வைப் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவுரல் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏழு மணியளவில் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம், துணை இராணுவக் குழுவுடன் இணைந்து வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் பின்னர், ஊருக்குள் சென்று அப்பாவிப் பொதுமக்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்த நாளாக இந்நாள் நினைவுகூரப்படுகிறது