இலங்கையில் இதுவரை 1,62,000 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 29,121 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தேசிய மையம் கூறியுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த 55 பேரை வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மையம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 823ஆக காணப்படுகின்றது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.