கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கியூபெக் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை அறிவித்தனர்,
இதே காலகட்டத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் ஜூலை 24 க்கு பின்னர் நான்கு மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாகாணத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 59,458 ஆகவும் 5,678 பேர் இறந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.