இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,671 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை 06 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்த குண்டசாலை தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது.
அத்தோடு கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 04 பேருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2001 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 659 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.