முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது முறையற்ற விதத்தில் செயற்பட்டமை மற்றும் நபர் ஒருவரை காயத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பாக குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல நீதிமன்றில் முன்னிலையானதை தொடர்ந்து கடந்த ஜூன் 03 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.