முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகியுள்ளார்.
தனிப்பட்ட வழக்குகளை மேற்கோள்காட்டி இந்த வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகியுள்ளார்.
குறித்த மனு தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்ற அமர்வில் உயர் நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட மற்றும் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் உள்ளனர்.
மேலும் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த இந்த மனு ஓகஸ்ட் 7 ஆம் திகதி மேலதிக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.