பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஹோமாகம பகுதியில் உள்ள குறித்த பொலிஸ் அலுவலரின் வீட்டிலிருந்து இரண்டு டி -56 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதை அடுத்தே அந்த அதிகாரி நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து குறித்த துப்பாக்கிகள் பயங்கரவாதம் அல்லது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடைய ஏதேனும் குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்றன.
அந்தவகையில் குறித்த துப்பாக்கிகள் ஜூன் 29 அன்று ஹோமகமவில் விசேட அதிரடி படையினரால் கைப்பற்றிய துப்பாக்கிகளுடன் தொடர்புடையன என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஒரு பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மிகப்பெரிய ஆயுதங்களே இவை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படதை அடுத்து சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.