ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றவுடன் நாட்டில் பல மாற்றங்கள் நிகழும் என்றும் அது மூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாகிக்கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட வேண்டாம் என்றும் தாம் எந்த தரப்பையும் நிராகரிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய லக்ஷமன் யாப்பா அபேவர்தன இந்த நாட்டை நேசிக்கும் சகல தரப்பினருடம் நாம் இணைந்து செயற்பட விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.
ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் கூட்டமைப்பு அரசாங்கத்தில் கூட்டணி அமைக்க முடியாது என குறிப்பிட்ட அவர் கொள்கைக்கு அமைய அவர்கள் எதிர்கட்சியாக இருக்கவே விரும்புகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றங்களை முன்னெடுப்போம் எனவும் லக்ஷமன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்