ஹாமில்டனில் உள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகளை மீண்டும் பார்வையிடும் வாய்ப்பு, இன்னமும் ஒரு வாரத்தில் கிட்டவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஹாமில்டனில் உள்ள சில நீர்வீழ்ச்சிகள், பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளன.
டெவில்ஸ் பஞ்ச்போல் மற்றும் டிஃப்பனி நீர்வீழ்ச்சி ஆகியவை பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும். அதேபோல, வாகன நிறுத்துமிடங்களும் திறக்கப்படும்.
ஆனால், டியூஸ் நீர்வீழ்ச்சி, வெப்ஸ்டர் நீர்வீழ்ச்சி மற்றும் டன்டாஸ் மலை ஆகியவற்றின் பிரபலமான பகுதிகள் தற்போதைக்கு மூடப்படும்.
நீர்வீழ்ச்சிக்கு வருபவர்கள், தமக்கும், தங்கள் சமூக வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.