முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்று வந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
எனவே இளைஞனின் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை குறித்த வைத்தியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.