UPDATE 02: நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, மேலும் ஐவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ஐவரும் சேனபுர புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வில் உள்ளவர்கள் என தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் 665 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 01: நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக இறுதியாக கண்டறியப்பட்ட மேலும் ஏழு பேர் குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த ஏழு பேரில், மூவர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய நால்வரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் 660 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.