பிரபல தொலைக்காட்சி நடிகையான திவ்யா சௌக்சே தனது 28 வயதில் காலமாகியுள்ளார்.
திவ்யா இறப்பதற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நான் சொல்ல விரும்புவதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. பலர் இதுபற்றி விசாரித்தீர்கள்.
இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மரணப் படுக்கையில் உள்ளேன். கேள்விகள் எதுவும் வேண்டாம். நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று எழுதியிருந்தார்.
அவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.