UPDATE 03: நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நால்வரும் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளதுடன் நாட்டில் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவர்களில் ஆயிரத்து 980 பேர் குணமடைந்துள்ளதுடன் இன்னும் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 11 பேர் மரணித்துள்ளனர்.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 02: நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 464ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் இருவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூவரும் ஹபராதுவ, ராஜாங்கனை மற்றும் லங்கபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஐவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1980 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது 473 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 01: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 459ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் மற்றொருவர் குவைத்தில் இருந்து வந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.