கனேடிய ஆயுதப் படைகளின் உயர் அதிகாரி மற்றும் கனடாவின் மிக நீண்ட காலமாக பணியாற்றும் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் ஜொனாதன் வான்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அரசாங்கம் வேறு நபரை இந்த பதவிக்கு பெயரிட்டவுடன், அடுத்த மாதங்களில் அவர் தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக அறிவித்தார்.
எனினும், நேட்டோவின் இராணுவக் குழுவின் அடுத்த தலைவராகுவதில் தனக்கு விருப்பம் இருப்பதனையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கனேடிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான அவர், நாட்டிற்குச் செய்த சேவைக்கு ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளார்.