நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கும் விமானப்படையை சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் இன்றுமட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2080 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1955 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் 114 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 35 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.