யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்றுவந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த 2 நாட்களில் இதுவரை 339 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி மன்னாரிலும் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.