கனடாவில் புதிதாக பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அங்கு நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 331 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எட்டு பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 486 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 ஆயிரத்து 170 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும் அங்கு எட்டாயிரத்து 798 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.