தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி புதுச்சேரி மற்றும் வட மாவட்டங்கள், உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழைப் பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.