நாட்டில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இன்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் என்றும் 5 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 121 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.