கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு செல்வதற்கான திறனை அதிகரிப்பதற்காக, புதிய உபகரணங்களை வாங்கும் பணியில் கனேடிய இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த வாரம் பொதுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய ஆவணங்களின்படி, இந்த தகவல் வெளிவந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின்படி, அவர்கள் புதிய மற்றும் சிறப்பு சுகாதார உபகரணங்களை வாங்குகிறார்கள். இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடவடிக்கைகளுக்கு மருத்துவ உதவியை வழங்கும் திறனை மேம்படுத்தும்.
ஏற்கனவே ரோயல் கனடிய விமானப்படை விமானங்கள் உள்ளன. அவை கொவிட்-19 நோயாளிகளைக் கொண்டு செல்லக்கூடியவை.
இருப்பினும் பலவிதமான தொற்று நோய்கள் உள்ளவர்களுக்கு நோயாளிகளின் போக்குவரத்தை அனுமதிக்க புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன