UPDATE 02 – கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது.
UPDATE 01 – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1634 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 811 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.