கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தியபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்காய்வுப் பிரிவிற்குள் நுழைந்த குறித்த வைத்தியர், 79,35,437 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றபோது கைது செய்யப்பட்டார்.
அரச வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது