கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் திரைப்படத்துறை மீண்டும் இயங்க பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது.
வொர்க் சேஃப் பி.சி (டபிள்யூ.எஸ்.பி.சி) மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்புக்கான அதன் திறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
படப்பிடிப்பின் போது உடல் ரீதியான விலகல், அதிகரித்த துப்புரவு நடைமுறைகள் மற்றும் கை கழுவுதல் நிலையங்களை நிறுவுதல் உள்ளிட்ட பிற தொழில்களுக்கும் உள்ள போன்ற நடவடிக்கைகள் ஆகியன வழிகாட்டுதல்களில் அடங்கும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண திரைப்பட ஆணையம். திரைப்படத்துறையை மீண்டும் இயக்க அனுமதி வழங்கியுள்ளதால், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்