LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 10, 2020

கல்முனையில் கருணாவுக்கு ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு

கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான விளம்பர பதாதைகளை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர்.
அத்தோடு, அம்பாறை – கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7