LATEST NEWS

Canada (Toronto)

Toronto booked.net
+18°C


















Sunday, June 14, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹிதவுக்கு அழைப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது எதிர்வரும் 23 ஆம் திகதி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள், தமக்கு எதிராக  முன்னெடுக்கப்பட்டதாக ரோஹித போகொல்லாகம பதிவு செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, எதிர்வரும் 15 ஆம் திகதி, விசாரணை ஒன்றுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7