விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் காரணமாக, விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் பணத்தை திரும்பக் கோரினர்.
இதன் பின்னணியில் தனது பணத்தை திரும்பத் தரும் கொள்கையை மாற்றி, பயணிகளின் பணத்தை திரும்ப கொடுப்பதற்கு வெஸ்ட்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பத் தரும் முதல் பெரிய கனேடிய விமானச் சேவையாளராக வெஸ்ட்ஜெட் தனது பெயரை பதிவுசெய்துள்ளது.