யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini-இன் சிலை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்டத்தின் முதல் ஆயராக வடிவமைக்கப்பட்ட உருவச் சிலையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இன்று திறந்து வைத்தார்.
குறித்த சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர்கள் இருவர், யாழ். மறை மாவட்ட ஆயரினால் கெளரவிக்கப்பட்டனர்.
இந்த சிலை திறப்பு நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருக்கள் கலந்து கொண்டனர்.