இந்த சிலையை அகற்றக் கோரும் சேஞ்ச்.ஓஆர்ஜி மனு ஒன்று நேற்று (புதன்கிழமை) மாலை நிலவரப்படி 10,000 இற்க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றது.
இதுகுறித்து மொன்றியலின் நேட்டிவ் மகளிர் தங்குமிட நிர்வாக இயக்குநர் நகுசெட் கூறுகையில், ‘பழங்குடி மக்களின் பட்டினியில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். எனவே நாங்கள் ஏன் அவரின் சிலையை விரும்ப வேண்டும்?’ என கேள்வியெழுப்பினார்.
கனடாவின் முதல் பிரதமரான மெக்டொனால்ட் குடியிருப்பு பள்ளி அமைப்பை நிறுவியவராக இருந்தார். அவர் ப்ரேரிஸில் பழங்குடி மக்களுக்கு எதிராக பட்டினி நடவடிக்கைகளை வழிநடத்தினார்.
அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின், இனவெறி மற்றும் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், கடந்த காலங்களில் நிறுவப்பட்ட தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன.
இதற்கமைய, காங்கோவின் ஆட்சி 10 மில்லியன் மக்களின் மரணத்திற்கு வழிவகுத்த இரண்டாம் லியோபோல்ட் மன்னரின் சிலையை அண்மையில் பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்தெறிந்தனர். அதேபோல பிரித்தானியாவில் அடிமை வணிகர் எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலையை உடைத்தெறிந்தனர்.