எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவிருந்த 3 வேட்பாளர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர்.
அதாவது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான நிலூகா ஏக்கநாயக்க போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
அதேபோன்று மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான டேனட் பன்னியன்துவகேயும் அண்மையில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அண்மையில் அறிவித்திருந்தார்.
அதாவது கடந்த ஒரு வாரத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த 3 வேட்பாளர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளனர்.