என் தாய் வயிற்றில்
எனக்கு உயிர் கொடுக்க
காரணமாயிருந்தது
என் அப்பாதான்.!
என் தாய் என்னை
பெற்று இந்த பூமிக்கு
தத்துக் கொடுக்க
நம்பிக்கை அளித்தது
என் அப்பாதான்..!
அம்மாவின் அன்பில் வளர்ந்து
அரவணைப்பாக இருந்தாலும்
என்னைத் தோளிலேற்றி இந்த
உலகத்தை முதலில் காண்பித்தவர்
என் அப்பாதான்..!
தோல்வியுற்று சோர்வடைந்த போதிலும்
எனக்குள் தைரியம் என்னும் விதையை
ஊன்றியது என்னவோ என் அப்பாதான்.
வாழ்வின் இன்ப துன்பங்களை
கண்டறிய கற்றுக் கொடுத்த ஆசான்
என் அப்பாதான்.!
ஓடி ஓடி உழைத்தும் கூட தனக்கென
ஒன்றும் சேர்க்காத ஜீவன்
அப்பாதான்.!
அவருடைய ஆசைகளை மறந்து
என்னுடைய ஆசைக்காக இன்றும்
என்னுடன் பயணிக்கும்
என்னுடைய முன்மாதிரி என்றால்
அது என் அப்பாவாகத்தான்
இருக்க முடியும்
ஆனால் அப்பாக்களும் சிறந்தவர்கள்தான்
அவர் மனம் சோர்வுற்ற பொழுதும்
என்னை தளரவிடமாட்டார்.!
அவர் எனக்கு அப்பா மட்டும் அல்ல
என்னுடைய தலைசிறந்த நண்பனும் தான்.!
என்னதான் எழுத்தில்
வர்ணித்து எழுதிவிட்டாலும்.!
என் ஆயுளை தன் குருதியால்
வர்ணித்தவர்.!
உடலுருக்கி உழைத்து
வலிகளை தன்னுள்
புதைத்து எனை வளர்த்தவர்.!
ஆயிரம் சோதனைகள்
ஆயிரம் வலிகள்
ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள்.!
அனைத்தையும் தகர்த்து.!
அன்பாலே எனை வளர்த்து.!
ஆகப்பெரும் உலகில் என நிலைநிறுத்தி
ஆலமரமாக நான் வளர்ந்தாலும்
என் ஆணிவேர் எனது அப்பாதான்.!
தந்தையர் தின வாழ்த்துகள்
கவிசுதா