அகில இலங்கை முச்சக்கரவண்டி சேவையாளர் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் முச்சக்கர வண்டிகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, வவுனியா மாவட்டத்தில் உள்ள ஏனைய முச்சக்கரவண்டி தரிப்பு நிலையங்களிலும் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, சுனில் ஜயவர்தன அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக வவுனியா முச்சக்கரவண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.