கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கென ஜனாதிபதியினால் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியமான இடுகம நிதியம் ஸ்த்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் இடுகம கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹெலரணவிரு படையணியின் அநுராதபுர மாவட்ட அலுவலகத்தினால் 2 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் இடுகம நிதியத்திற்க நன்கொடை செய்யப்பட்டது.
மேலும் சில தனியார் நிறுவனங்களும் நிதியத்திற்கு நன்கொடை செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இடுகம நிதியம் தொடர்பில் 0112 320 880 அல்லது 0112 354 340 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.