இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று மாலை இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,182 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 41 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 79 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 695 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இலங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,166
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,164
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,162 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,162 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றுமட்டும் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இன்றுமட்டும் 21 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தொற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 458 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 மரணங்கள் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.