தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று (வியாழக்கிழமை) 6 வைத்தியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 890 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 835 பேர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 662 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.