நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வெளியேற்ற உத்தரவு நீக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தற்போது மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
நேற்று முன் தினம் (சனிக்கிழமை) பிற்பகல், மதியம் 12.20 மணியளவில் பரவத் தொடங்கிய காட்டுத்தீயினால், 1,000இற்க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன், கேண்டி மவுண்டன் வீதியில் வசிப்பவர்கள் உட்பட, அவர்கள் வெளியேற்றத்திற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கும் மையமாக நெடுஞ்சாலை 7இல் உள்ள ‘ஏரி எக்கோ சமூக மையம்’ திறக்கப்பட்டது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கும் மையமாக நெடுஞ்சாலை 7இல் உள்ள ‘ஏரி எக்கோ சமூக மையம்’ திறக்கப்பட்டது.
தற்போது தீயணைப்புக் குழுவினர் 24 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால், மக்களுக்கான வெளியேற்ற உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தீ விபத்தால் எந்த வீடுகளும் இழக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டில், இதே பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் எரிந்தது. இதில் இரண்டு வீடுகள் தீக்கிரையாகின. சுமார் 5,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.