வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஆரம்ப கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு பெற்றோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைகால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டதுடன், பாடசாலையில் சிரமதானத்தினை நாளை முதல் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜுன் மாதம் பாடசாலைகளை மீளத்திறந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வழமைக்குக்கொண்டு வருவதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.