பலரினதும் கவனத்தை ஈர்த்த, கல்கரி மிருகக்காட்சி சாலையின் இரண்டு பாண்டாக்களும், அதன் சொந்த நாட்டுக்கே செல்லவுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக கல்கரி மற்றும் சீனா இடையேயான நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் மூங்கில் கிடைப்பது கடினமாகி வருகின்றது.
இதனால், இரண்டு பாண்டாக்களையும் சீனாவுக்கே திரும்பி அனுப்ப மிருகக்காட்சி சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கல்கரி மிருகக்காட்சிசாலையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் க்ளெமென்ட் லாந்தியர் கூறுகையில்,
“இந்த சவாலான மற்றும் முன்னோடியில்லாத காலங்களில் எர் ஷுன் மற்றும் டா மாவோ இருப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான இடம் மூங்கில் ஏராளமாகவும் எளிதாகவும் கிடைக்க கூடிய இடமாகும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறினார்.

கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எர் ஷுன் மற்றும் டா மாவோ ஆகிய பாண்டாக்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கனடா வந்தடைந்தன. ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னமே குறித்த பாண்டாக்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கபடவுள்ளன.
ஒவ்வொரு வயது வந்த மாபெரும் பாண்டா தினமும் சுமார் 40 கிலோகிராம் மூங்கில் சாப்பிட கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.