கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 05 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
இந்த ஊரடங்கு சட்டத்தினை கடுமையான முறையில் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் முன்னெடுத்துவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொலிஸாரும் படையிரும் வீதிரோந்து பணிகளை முன்னெடுத்துள்ளதுடன் வீதிச்சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றன.
சுகாதார பிரிவினரின் நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெற்றுவரும் நிலையில் ஏனைய பிரிவுகளின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளன.
மருத்து விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் முற்றாக முடங்கியுள்ளன.
இதேவேளை, நாளை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது