வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “வன்னி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து கிடைப்பது மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
எனவே சமூக சீர்கேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை பொதுமக்கள் எனக்கு நேரடியாக தெரிவிக்கமுடியும். அதன்மூலம் சட்டவிரோத செயற்பாடுகளை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறான சம்பவங்களை 0766224949, 0766226363, 0242222227 ஆகிய தொலைபேசி இலக்கங்களிற்கோ அல்லது dig.vavuniya@police.lk என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ மும்மொழிகளிலும் தெரிவிக்கமுடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.