இதற்கமைய, கனடாவில் 1,500 தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
இந்த தடை உத்தரவானது, உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் இந்த வகையான ஆயுதங்களை விற்பனை செய்வது, கொண்டு செல்வது, இறக்குமதி செய்வது அல்லது பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது.
இந்த தாக்குதல் பாணி ஆயுதங்களை ஏற்கனவே வைத்திருக்கும் துப்பாக்கி உரிமையாளர்கள் தங்கள் உரிமையில் விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த விருப்பங்களின் விவரங்கள் இன்னும் கோடிட்டுக் காட்டப்படவில்லை என்றாலும், உரிமையாளர்களுக்கு திரும்ப வாங்குதல் திட்டத்தின் மூலம் ஈடுசெய்யும் திறனும் இருக்கும்.
துப்பாக்கி உரிமையாளர்கள், ஏப்ரல் 2022ஆம் ஆண்டுக்குள் சட்டத்திற்கு இணங்க வேண்டும். அந்த காலக் கட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை அப்புறப்படுத்தாதவர்கள் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ்த் தண்டனையை எதிர்கொள்வார்கள்.