கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியை பின்தள்ளி இந்தியா 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின் தள்ளிய இந்தியா கடந்த திங்கள் அன்று 10வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலைவரப்படி 1 இலட்சத்து 67 ஆயிரத்து 250 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று புதிதாக 1864 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 86 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4797 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 71 ஆயிரத்து 369 பேர் சிகிச்சைகளுக்குப் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 91 ஆயிரத்து 084 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.