கடைப்பிடித்தால், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து ஒன்றாரியோ மாகாணம் விரைவில் மீண்டு வரும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது குறித்து, நேற்று (சனிக்கிழமை) ஊகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் குறைந்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடித்தால், விரைவாக பொருளாதாரம் திறக்கப்பட்டு மீண்டும் புதிய இயல்புநிலைக்குத் திரும்ப முடியும்’ என கூறினார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து குயின்ஸ் பூங்காவில் போராடிய குழுவொன்றை, ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போராட்டத்தில் கனேடியக் கொடி தலைகீழாக வைத்திருப்பதைக் கவனித்ததாக கூறிய அவர், இது மிகவும் அவமரியாதையான செயல் என அதிருப்தி வெளியிட்டார்.
அத்துடன், சமீபத்திய வாரங்களில் இவ்வாறு நிகழ்வது இரண்டாவது முறை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.