கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
அதற்கமைய ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என்ற பெயர்களை தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு முறையே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர்.
இது தொடர்பாகக் கூறும்போது, ‘இந்த இரண்டு பெயர்கள், அதாவது குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர் ஆகியவை கொரோனா வைரஸுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் இரண்டு முக்கிய விடயங்களாகும்.
அதனால்தான் இந்த ஆண்குழந்தைகளுக்கு இந்தப் பெயரையே சூட்டியுள்ளோம்’. டெலிவரிக்கு முன்னதாக எனக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது’ என்று தாயார் வேணு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தாரிடம் தெரிவித்தார்.