திருநெல்வேலி அல்வா, பழனி பஞ்சாமிர்தம் வரிசையில் 34ஆவது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்த சிறப்பைப் பெற்றுள்ளது.
கரிசல் மண்ணில் விளையும் நிலக் கடலைக்கு இயற்கையிலேயே அதிக இனிப்புச்சுவை இருக்கும் என்று கூறும் நிலையில் அதைக்கொண்டு தயாரிக்கப்படும் மிட்டாய்கள் வெளி மாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன்பெயரைப் பயன்படுத்தி போலியான கடலை மிட்டாய்கள் விற்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் முறையிட்டதையடுத்து 2014ஆம் ஆண்டு அப்போதைய கோவில்பட்டி உப ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மூலம் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.