தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைவடைந்துள்ளது.
இதுவேளை, இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 939 பேர் குணமடைந்த குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 384 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 93 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 6 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பரவியவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடுகளுக்கு்த திரும்பியுள்ளனர்.
இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.
இ்வவாறு கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் குணமடைந்துள்ளமை மற்றும் பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளமை தமிழக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.