கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் பல்வேறு நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணிவருவதுடன், கடமை நேரங்கள் முடிவடைந்ததும் மீண்டும் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்கின்றனர்.
இதனால் பொலிஸ் நிலையங்களில் இருந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில் வெளியில் சென்று கடமைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸார் தங்குவதற்காக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நேற்றிலிருந்து பொலிஸார் குறித்த மண்டபத்தைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.