தென்மராட்சி-மீசாலை சந்திப் பகுதியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மீசாலை சந்தி ஊடாக துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஏ-9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழில் இருந்து கொடிகாமம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இதில் துவிச்சக்கரவண்டியில் சென்ற 11 வயதான மீசாலை தெற்கைச் சேர்ந்த தே.சச்சுதன், மோட்டார் சைக்கிளில் பயணித்த தவசிகுளம் கொடிகாமத்தைச் சேர்ந்த 18 வயதான அ.அஜேந்திரன், மிருசுவில் தெற்கைச் சேர்ந்த 18 வயதான லக்சன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்