செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழவைத்தகுளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த ராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிகொண்டிருந்த இரு சிறுவர்கள் இனம் தெரியாத பொருள் ஒன்றை எடுத்துசென்று சுற்றியல் ஒன்றினால் அதனை தாக்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த பொருள் திடீர் என்று வெடித்துள்ளது.
இதனால் காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், மேலதிக சிகிச்சைகளுக்கா வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் சனாஸ் வயது 12, முகமட் ராசித் வயது 16 ஆகிய சிறுவர்களே காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,